ஒரே தடவையில் ஐந்து கோள்களை வானத்தில் அதிசயம் ..!
முதன் முறையாக ஒரே தடவையில் ஐந்து கோள்களை வானத்தில் அவதானிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரகாசமாக காட்சியளிக்கும் இந்த ஐந்து கோள்களை இலங்கையர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை காணக் கூடியதாக இருக்கும்.
சூரியன் உதிப்பதற்கு முன்னர் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த கோள்களை இலங்கையர்கள் அவதானிக்கலாம்.
இவ்வாறான ஒரு சம்பவம் பண்டைய காலத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தற்போது நிகழ உள்ள இந்த அதிசய சம்பவத்தில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை ஒரே வரிசையில் காட்சியளிக்க உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரே தடவையில் ஐந்து கோள்களை வானத்தில் அதிசயம் ..!
Reviewed by Author
on
January 20, 2016
Rating:

No comments:
Post a Comment