ம/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாத அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம்,தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா-
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாத அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம்,தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா எதிர்வரும் 09.01.2016 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வட மாகாண சபை முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்வதோடு, சிறப்பு விருந்தினர்களாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.கே.மஸ்தான், வட மாகான கல்வி அமைச்சர் த.குருகுலராசா அவர்களும்,கௌரவ விருந்தினராக வட மாகான சபை உறுப்பினரும் இப்பாடசாலையின் பழைய மாணவருமான எச்.எம்.ரயீஸ் அவர்களும், விசேட விருந்தினர்களாக வட மாகாண கல்வி அமைச்சரின் செயலாளர் திரு இ.இரவீந்திரன் ,மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
நாடு முழுதும் பழைய மாணவர்களைக் கொண்டுள்ள எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் இந்நிகழ்வுக்கு கல்விமான்கள்,பெரியோர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள் அனைவரையும் வருக வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.
எச்.எம்.ரயீஸ்
ம/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாத அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம்,தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா-
Reviewed by NEWMANNAR
on
January 08, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 08, 2016
Rating:


No comments:
Post a Comment