யாழ் காரைநகர் வியாவில் ---பண்டிதர் கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டுமலர் வெளியீடு ....
பண்டிதர் கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு மலர் வெளியீடு அண்மையில் 27-12-2015 யாழ் காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தில் நடைபெற்றது.

அன்றைய நிகழ்வில் வியாவில் ஐயனார் தேவஸ்தான அறங்காவலர் மங்கல விளக்கேற்றுவதையும்
மன்னாரில் இருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சித்தவைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி செ.லோகநாதன் திருப்புகழ் இசைப்பதையும்
வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் சிறப்புப் பிரதியை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் மலர் ஆசிரியர் பா.துவாரகன்,
பிரதம விருந்தினர் வடமாகாண சபை முதல்வர் கௌரவ சி.வி.கே.சிவஞானம் ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் அருகே தெய்வத் தமிழிசைக் கவிஞர் இராசையா குகதாசன் நிற்பதையம்
கலாபூசணம் கே.எஸ் சிவஞானராஜா திருமுறை இசைப்பதையும்
முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் சிறப்புரை ஆற்றுவதையும்
நூற்றாண்டு மலரின் சிறப்புப் பிரதியை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் மலர் ஆசிரியர் பா.துவாரகன், பிரதம விருந்தினர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும்
நூல் மதிப்பீட்டுரை நிகழ்த்திய பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் அவர்களுக்கு தெய்வத் தமிழிசைக் கவிஞர் இராசையா குகதான் மாலை அணிவிப்பதையும்
வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களில் ஒரு பகுதியினர் மேடையில் அமர்ந்திருப்பதையும் விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையம் படங்களில் காணலாம் .
யாழ் காரைநகர் வியாவில் ---பண்டிதர் கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டுமலர் வெளியீடு ....
Reviewed by Author
on
January 08, 2016
Rating:
Reviewed by Author
on
January 08, 2016
Rating:





No comments:
Post a Comment