அண்மைய செய்திகள்

recent
-

புதிய தொலைபேசி கட்டணத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை...


இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் குறித்த கட்டணங்களை அமுல்படுத்த உள்ளதாக  தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் ஒரே வலையமைப்பிற்கான அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு ரூபா 1.00 இலிருந்து ரூபா 1.50 ஆகவும் ( 50% ஆக அதிகரிக்கப்பட்டு ) ஏனைய வலையமைப்பிற்கான கட்டணங்கள் ரூபா 2.00 இலிருந்து ரூபா 1.80 ஆகவும் (28% இனால் குறைக்கப்பட்டு ) மாற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வலையமைப்பினர் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க, குறிப்பாக குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட வலையமைப்பினர் இதன் மூலம் ஏனைய வலையமைப்பினருடன் போட்டியிட முடியும் என இந்திரஜித் மேலும் தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் 5 பிரதான தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குனர்கள் காணப்படுவதோடு, மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்களை டயலொக் மற்றும் மொபிடெல் வலையமைப்பினரே தம் வசம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எயார்டெல்,  எடிசலாற்,  ஹட்ச் ஆகியன இலங்கையில் இயங்கும் ஏனைய வலையமைப்புகள்  குறிப்பிடத்தக்கது.

புதிய தொலைபேசி கட்டணத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை... Reviewed by Author on January 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.