திருக்கேதீச்சரம், சிவன் அருள் இல்லத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவின் நான்காவது (இறுதி) அமர்வு-Photos
இடம்- பல குழந்தைப் பாடல்களைத் தமிழ் உலகுக்கு அளித்த தமிழ் அறிஞர் பெயரால் அமைக்கப்பட்ட “வித்துவான் வேந்தனார் அரங்கில்”
தலைமை :- திரு.வே.பொ.மாணிக்கவாசகர் அவர்கள்
(நிர்வாக ஆலோசகரும் முன்னாள் பணிப்பாளரும் )
பிரதம விருந்தினர்:- திரு. த.விஸ்வருபன் அவர்கள்
(மாகாண ஆணையாளர் ,சிறுவர் நன்னடத்தைத் `
திணைக்களம் வடமாகாணம் )
தற்போதைய யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் சிவஸ்ரீ தர்மகுமாரக்குருக்கள் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். பல் வேறு சிறுவர் நிகழ்வுகள் இடம்பெற்றன. நடைபெற்ற நிகழ்வுகளின் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.இறுதி நாள் மாலை நிகழ்வில், வடமாகாண சிறுவர் பராமரிப்பு நன்னடத்தைத்திணைக்களத்தின் ஆணையாளர் திரு.விஸ்வரூபன் அவர்கள் பிரதம விருந்தினராகக்கலந்து சிறப்பித்தார்.இல்லச்சிறார்கள் சிறுமியர்களுடன் பிரதம விருந்தினர், திணைக்கள அலுவலர்கள்,அறங்காவலர்கள், பணிப்பாளர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். .திருக்கேதீச்சரம், சிவன் அருள் இல்லத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவின்இறுதி நாள் மாலை நிகழ்வில், வடமாகாண சிறுவர் பராமரிப்பு நன்னடத்தைத்திணைக்களத்தின் ஆணையாளர் திரு.விஸ்வரூபன் அவர்கள் சிறப்பித்தார்.
மன்னர் திருக்கேதீச்சரம் கௌரியம்பாள்அ.த.க. பாடசாலையில் பயிலும்
சிவன் அருள் இல்ல சிறார்கள் பன்னிரண்டு பேர், க.பொ த.உயர்தரம் -
2015 பரீட்சைக்குத் தோற்றியதில் பத்துப் பேர் சித்தியடைந்துள்ளனர் .
A,2B – இருவர்
A,B,C - இருவர்
A,2C - மூவர்
2B,S - ஒருவர்
A,C,S - ஒருவர்
C,2S - ஒருவர்
இந்து நாகரீகப் பாடத்துக்குத் தோற்றிய ஏழுபேருமே ‘A’ எடுத்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.இவர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.இவர்களுக்குக் கற்பித்த பாடசாலை ஆசிரியர்கள் ,அக்கறை காட்டியஅதிபர், மற்றும் இல்லத்திற்கு வருகை தந்து கற்பித்துத் தயார்ப் படுத்திய ஆசிரியர்களான திருவாளர்கள் குருபரன் , மயூரன் , றோகன்ராஜ், திருமதி றோகன்ராஜ் ஆகியோருடன் எமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடனஅவர்களையும் நன்றியுடன் பெரிதும் பாராட்டிநிற்கிறோம்.
திருக்கேதீச்சரம், சிவன் அருள் இல்லத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவின் நான்காவது (இறுதி) அமர்வு-Photos
Reviewed by NEWMANNAR
on
January 11, 2016
Rating:

No comments:
Post a Comment