பனிப்பாறை பிளவடைந்ததால் 150,000 பென்குயின்கள் உயிரிழப்பு,,,
அந்தாட்டிக்கா பிராந்தியத்தில் கடல் பறவையான பென்குயின்கள் இனப்பெருகுவதற்கான தளமாக அமைந்த பாரிய பனிப்பாறையொன்று பிளவடைந்து சிதைவடைந்ததில் சுமார் 150,000 பென்குயின்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு அந்தாட்டிக்காவிலுள்ள 38.6 சதுர மைல் பரப்பளவுள்ள பனிப்பாறையானது 6 வருடங்களுக்கு முன் சேதமடைந்தது. அந்தப் பனிப்பாறைப் பிராந்தியத்தில் சுமார் 160,0000 பென்குயின்கள் உயிர் வாழ்ந்துள்ளன.
மேற்படி கடலில் பனிக்கட்டி பாறைகள் சேதமடைந்து விழுந்ததால் ஏனைய 150,000 பென்குயின்கள் உணவைப் பெறவும் இனவிருத்தி செய்யவும் 37 மைல்களுக்கு அதிகமான தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் உணவின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் 10,000 பென்குயின்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பனிப்பாறை பிளவடைந்ததால் 150,000 பென்குயின்கள் உயிரிழப்பு,,,
Reviewed by Author
on
February 15, 2016
Rating:
Reviewed by Author
on
February 15, 2016
Rating:


No comments:
Post a Comment