மன்னாரில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது-Photos
மன்னார் மாவட்டத்தில் பல கிராமங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை மன்னார் பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
மன்னார் பெரிய கமம், செல்வ நகர் அம்மன் கோவில், எமில் நகர் போன்ற இடங்களில் கொள்ளை சம்பவங்களுடன் சம்பந்தபட்ட மூன்று சந்தேக நபர்களை மன்னார் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மன்னார் நகர பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவந்த நிலையில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் குறித்த கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி அஜந்த டேற்றிகோவின் பணிப்புரைக்கு அமைவாக குற்றதடுப்பு பொலிஸ் பிரிவு அதிகாரி பி.ஆர்.சரத் தலைமையிலான குழு குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
இதில் கொள்ளை சம்பவங்களுடன் நேரடி தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் தங்கங்களை வாங்கிய குற்றசாட்டில் நகை வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து நான்கு லட்சம் பெறுமதி மிக்க நகைகளும், கையடக்க தொலைபேசிகள் இரண்டும் , நகைககள் விற்ற ஆவணங்கள் சிலவும், கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது-Photos
Reviewed by NEWMANNAR
on
February 15, 2016
Rating:

No comments:
Post a Comment