மன்னார் மாவட்டத்தில் தான் உள்ளது வெற்றி நாயகி கிராமம் வேற்றுக்கிரகத்தில் இல்லை-முழுமையான ஆவணப்படங்களுடன்
மன்னார் மாவட்டத்தில் தான் உள்ளது வெற்றி நாயகி கிராமம் வேற்றுக்கிரகத்தில் இல்லை மதிப்பிற்குரிய அமைச்சர்களே பாராளுமன்ற உறுப்பினர்களே வடமாகாசபை உறுப்பினர்களே மன்னார் மாவட்ட உயர் அதிகாரிகளே எங்கள் நிலையினை உணர்ந்து கொள்ளுங்கள்….
பராசக்தியிடம் காணி கேட்டான் மகாகவி பாரதி…..
மதிப்பிற்குரியவர்களே உங்களிடம் கேட்கிறோம் காணி உறுதி
மனதில் உறுதியுடன் 1998-2016 வரை தருவீர்களா உறுதி உறுதி
பார்பதற்கு கூட மிஞ்சாது எங்கள் வெற்றி நாயகி கிராமம் இறுதி……
மன்னார் மாவட்டத்தின் பிரதான கிராமங்களில் ஒன்றாக விளங்குகின்ற பேசாலைக்கிராமத்தில் அமைந்துள்ள சிறியதொரு கிராமம்தான் வெற்றி நாயகி 100 வீட்டுத்திட்டகிராமம் இக்கிராமம் பேசாலையில் இருந்து தலை மன்னார் பிரதான வீதியில் 2கிலே மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
1998ம்ஆண்டு மீன்பிடித்துறை அமைச்சினால் மன்னார் மாவட்டத்தின் மீனவசமூகத்தின் 100 மீனவகுடும்பங்களுக்கு வீட்டுத்திட்டமாக 12.5 ஏக்கர் பரப்பளவில் அமைத்துக்கொடுக்கப்பட்ட கிராமம்தான் வெற்றி நாயகி 100 வீட்டுத்திட்டகிராமம் இல்லை இல்லை சிரமம்….
1998ம் ஆண்டு 50000ரூபா வீட்டுத்திட்டம் தந்த போது மீன்பிடிஅமைச்சும் மன்னார் வீட்டுத்திட்ட அதிகார சபையும் எங்களைத்தான் கட்டச்சொன்னார்கள் வேண்டிய பொருட்களையும் பணத்திணையும் தருவதாக சொன்னார்கள் ஆனால் எங்களில் சிலர் எங்களால் கட்டமுடியாது. நீங்களே கட்டடித்தாருங்கள் என்று சொல்லவும் பேசாலை கோயில் பங்குத்தந்தை அவர்களால் பொறுப்பெடுத்து குத்தகைக்காரச் மூலம் கட்டுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் படி 100 வீடும் குத்தகைக்காரர் கட்டுவதாகவும் வீட்டுக்குரியவர்கள் வந்து உதவி செய்து கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் ஆகியது.
அதனடிப்படையில் 12.5 ஏக்கர் பரப்பளவில் இருந்து 2.5 ஏக்கர் காணியை பொதுவான செயற்பாட்டிற்கு எனவும் மீதி 10 ஏக்கர் காணியை ஒரு வீட்டுக்கு 20 பேர்ச் வீதம் 100 வீட்டுக்கும் ஒதுக்கினார்கள். எங்கள் பிரதேசமானத மிகுந்த உருந்த மணல் திட்டுக்கள் கொண்டதினாலும் கடல்காற்று வீசும் போது திட்டாய் இருக்கும் மணல் மேடு பள்ளத்தினை நிரப்பும் மணல் இல்லாத பகுதியில் மழை வெள்ளம் நிற்கும் ஆரம்பத்திலேயே சொன்னோம் மணல் திட்டுக்களை சமப்படுத்தி விட்டு பாதைக்கும் ஏற்றால் போல் காணியைதுப்பரவு செய்து ஒழுங்கமைத்து தாருங்கள் என்று ஆனால் அவ்வாறு செய்யவில்லை காரணம் அந்த நேரத்தில் யுத்த சு10ழ்நிலை காரணமாக எந்த விதமான வாகனங்களையும் இப்பிரதேசத்தில் கொண்டுவர முடியாதும் எமது தூரதிஸ்ட்டமே.
இந்தக்காணி இலவசமாகவா தந்தார்கள்…..????
இல்லை இல்லை மீன்பிடி அமைச்சினால் மீனவர்களுக்கு 100 வீட்டுதட்திட்டம் தருவதாக அறிவத்தது. காணி சொந்தமாக இருக்க வேண்டும் அதே நேரம் ஒரே இடத்தில் இருந்தால் தான் 100 வீட்டுத்திட்டம் சாத்தியப்படும். பல இடங்களில் 100 வீட்டுக்கும் தேவையான காணியைப்பார்த்தோம் இப்போது இக்கிராமம் அமைந்திருக்கும் இடம் தான் சரியாக அமைந்தது. அது பேசாலை கோயிலுக்கு சொந்தமான காணியும் அது பனங் காடாகவும் இருந்தது. கோயில் நிர்வாகத்துடன் கதைத்தபோது அவர்கள் 20 பேர்ச்சுக்கு 6000 ரூபா வீதம் 12.5 ஏக்கருக்கு தொகையினைப்பெற்றுக்கொண்டு அதற்கான பற்றுச்சீட்டைத்தான் தந்துள்ளார்கள் உறுதி தரவில்லை 1998 முதல் இதுவரை எமக்கு உறுதி கிடைக்கவில்லை யாராக இருந்தாலும் காணியினை எழுதிக்கொடுத்த பின்பு உறுதியைக்கொடுக்க வேண்டும்தானே ஏன் எமக்கு இன்னும் உறுதி கிடைக்கவில்லை….
உங்களுக்கான உறுதி யாரிடம் இருப்பதாக நினைக்கிறீர்கள்……
நாங்கள் கோயில் நிர்வாகத்திடம் கதைத்தோம் அவர்கள் மீனவசங்கத்தோடு கதைக்கச் (மன்னார் மீனவச்சங்கம்)சொன்னார்கள் கதைத்தோம் அவர்கள் அரசாங்கத்திடம் தான் கதைக்க வேண்டும் என்று சொன்னார்கள் ஒரு முறை இரு முறையல்ல பலமுறை 1998-2016 இன்று வரை கேட்கிறோம.; கச்சேரியிலும் பிரதேச செயலகத்திலும் இதுவரைக்கும் இருந்த பிரதேச செயலாளர்களிடம் அரசாங்க அதிபர்களிடம் எமது வேண்டுகோளினை முன்வைத்தோம் எந்தப்பலனும் இல்லை ஒரு முறை பிரதேச செயலகம் காணிக்கு போமிற் தருவதாக சொன்னார்கள் நாங்கள் முழுத்தொகையும் கட்டி இவ்வளவுகாலமாக இங்கு வாழ்கிறோம் எங்களுக்கு போமிற் தேவையில்லை உறுதி தான் வேண்டும்.
வீட்டின் நிலை ……????????........!!!!
1998-50000 ரூபா பெறுமதியான வீடு
காணிக்கு 6000 ரூபாவும்
வீட்டுக்கு 15000 ரூபாவும் கொடுத்துள்ளோம்.
வீடு புறாக்கூடு போல ஒரு அறையும் விறாந்தையும் குசினியும் தான் அதுவும் தரமான முறையில் கட்டப்படவில்லை ஒரு பைக்கற் சீமெந்தில் 50 கல் தான் அரிய வேண்டும் ஆனால் ஒரு பை;கற்றில் 90-100 அரிந்தார்கள் அத்தோடு வீடு பூச்சுப்பூசவும் இல்லை காற்றடிக்கும் போது வீட்டுச்சுவரில் இருந்து மண்சொரியும் அத்திவாரம்; முதல் வீட்டுச்சுவர்கள் எல்லாம் பாரிய வெடிப்புகள் உள்ளது. இதைக்கதைத்தபோது மீன்பிடி அமைச்சு தலா ஒரு இலட்சம் ரூபா தந்தார்கள் அதைக்கொண்டு குறிக்கப்பட்ட பகுதியை பூச்சுப்பூசியுள்ளோம் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்குள் முற்று முழுதாக எல்லா வீடுகளும் இடிந்து விடும் எத்தனை உயிர்களை பலியெடக்கப்போகுதோ தெரியவில்லை….
எங்களுக்கு கட்டித்தந்த இந்த வீட்டில் நல்லதோ கெட்டதோ விடையங்கள் என்றால் வெளியில் பந்நதல் போட்டுத்தான் காரியங்களை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக ஒருவர் இறந்து விட்டால் அவரை விட்டிற்குள் வைக்கமுடியாது வெளியில் தான் வைக்கவேண்டும் அந்தளவிற்கு சிறியதொரு வீட்டில் தான் குடும்பமாக வாழ்கின்றோம். இப்படியான பல விடையங்களை செல்ல முடியாது உணர்ந்து கொள்ள வேண்டும்.
பல நிறுவனங்கள் எமது கிராமத்திற்கு வந்து பார்த்து விட்டு எமக்கு பலவகையான உதவிகளை செய்ய முன்வருவார்கள் எங்களிடம் அவர்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான் காணி உறுதி அதுதானே எங்களிடம் இல்லை இருக்கும் கைத்துண்டைக்காட்டினால் வந்தவர்கள் எங்கள் முகங்களை பாரத்துவிட்டு செல்கிறார்கள் எந்த உதவிகளும் எங்களுக்க கிடைப்பதில்லை. இதுவரை எந்த அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ வடமாகாணசபை உறுப்பினர்களோ எங்கள் கிராமத்திற்கு வருகை தரவில்லை தேர்தல் காலங்களைத்தவிர…..
1. மலசலகூடம்
2. பொதுக்கிணறு
3. சீரான பாதை
4. தொடர்ந்து எரியக்கூடிய தெருவிளக்குகள்
5. ஆரம்ப வைத்தியசாலை (சிறிய வருத்தங்களுக்காக)
6. ஆரம்பப்பள்ளி உள்ளது மூடிய நிலையில்
7. பொது மண்டபம் உள்ளது மூடிய நிலையில்
8. பொது பேரூந்து தரிப்பிடம் இல்லை
9 சுகாதார அதிகாரிகள் வருவதில்லை
மற்றும் ஏனைய பொது கட்டிடங்களுக்கு இடம் உள்ளது கட்டித்தர நிறுவனங்களும் தயாராகவுள்ளது ஆனால் எங்களுக்கு தேவையானது ஒன்று தான் எங்களுக்கு சொந்தமான காணியுறுதி வேண்டும்.
ஆரம்பத்தில் 100 குடும்பங்கள் இருந்தன 2006ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் காரணமாக பயத்தினால் இடம் பெயர்ந்து பேசாலையிலும் தொந்தக்காரர் வீடுகளிலும் தங்கினர் பின்பு 66 குடும்பங்கள் மீண்டும் இக்கிராமத்திற்கு குடியேறினர் ஆனாலும் வீட்டின் நிலை மிகவும் மோசமாக இருந்தத பாரிய வெடிப்புக்கள் வெள்ளத்தினால் நுளம்புப்பெருக்கம் சுகாதாரமற்ற நிலை பயத்தினால் 66 குடும்பங்களில் இருந்தவர்களும் வாடகைக்கும் சொந்தக்கார வீடுகளுக்கும் மீண்டும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த எல்லாச் சுமைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு எங்கள் கிராமம் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் எங்களுக்கான சொந்தக்காணியில் சொந்த உறுதியோடு சுகந்திரமாக வாழ்வோம் என்ற நம்பிக்ககையில் தற்போது 33 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
மீனவ வீட்டுத்திட்டம் வந்தால் எங்கள் கிராமத்தினையும் உள்வாங்கி அபிவிருத்தி செய்ய வேண்டும்.
வெற்றிடமாக இருக்கினற 67 வீடுகளை இல்லாத மக்களுக்கு கொடுக்கலாம் அப்போது எங்கள் கிராமம் செழிப்புறும்.
1998 முதல் 2016 இன்று வரை எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் இந்தக்காலப்பகுதில் கடமையில் இருந்த அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் உயர் அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தினர் மீனவசங்கம் மீனவ அமைச்சுக்களை குறை கூறுவது எமது நோக்கம் அல்ல எமது தேவையினை காணி உறுதியினை பெற்றுத்தர வேண்டும் நாங்களும் எமது செந்தக்காணியில் நிம்மதியோடு சுகந்திரமாக வாழ வழியமைத்து தரவேண்டும் என்பதே எமது கோரிக்கiயும் வேண்டுகோளுமாகும்.
எங்கள் வெற்றி நாயகி 100 வீட்டுத்திட்டக்கிராமத்தை தயவு செய்து ஒரு முறை வந்து பார்வையிடுங்கள். நாங்கள் சொல்வதும் எங்கள் உண்மை நிலையும் உங்களுக்குப்புரியும்.
பார்வையிட்டால் எங்கள் நிலை புரியும்.
எங்களுக்கு நல்ல காலம் விடியும.;
வெற்றிகிடைக்கும் எனும் நம்பிக்கையில்
வெற்றி நாயகி 100 வீட்டுத்திட்ட கிராம மக்கள்
-மன்னார் விழி-
மன்னார் மாவட்டத்தில் தான் உள்ளது வெற்றி நாயகி கிராமம் வேற்றுக்கிரகத்தில் இல்லை-முழுமையான ஆவணப்படங்களுடன்
Reviewed by Author
on
February 15, 2016
Rating:
Reviewed by Author
on
February 15, 2016
Rating:

























No comments:
Post a Comment