இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஹான்ஸ் என அழைக்கப்படும் போதைப்பொருள் மீட்பு-இருவர் கைது.(படங்கள் இணைப்பு)
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஹான்ஸ்(HANS)என அழைக்கப்படும் போதைப்பொருட்களை விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
-தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றில் குறித்த போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் மன்னார் ஹாமன்சிற்கு முன்பாக வைத்து குறித்த தனியார் பேரூந்தை இடை மறித்து குறித்த போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பொருட்களை தன் வசம் வைத்திருந்த தலைமன்னார் மற்றும் கொழும்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹான்ஸ்(HANS) என அழைக்கப்படும் குறித்த போதைப்பொருள் 693 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்டுள்ளது எனவும் அவை 10 கிலோ 395 கிராம் எடை கொண்டது எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் தலைமைச் செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் தவுலகல அவர்களின் உத்தரவிற்கு அமைவாக விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி இ.ஜி.பிரியந்த தலைமையிலான குழுவினர் குறித்த போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
-குறித்த போதைப்பொருள் கொழும்புக்கொண்டு கொண்டு செல்லப்பட இருந்த நிலையிலே மீட்கப்பட்டுள்ளதாகவும்,தற்போது கைது செய்யப்பட்ட இரு நபர்களும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி இ.ஜி.பிரியந்த மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(29-02-2016)

Reviewed by NEWMANNAR
on
February 29, 2016
Rating:

No comments:
Post a Comment