அண்மைய செய்திகள்

recent
-

தேமுதிக எம்எல்ஏ-க்கள் எட்டு பேர் ராஜினாமா! எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த்...


தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் எட்டு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு

இதுகுறித்து சபாநாயகர் தனபால் கூறியதாவது, தமிழக தேமுதிக அதிருப்தி எல்எல்ஏ-க்கள் எட்டு பேர் மற்றும் பாமக-வை சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்கள் சேர்த்து மொத்தமாக 10 பேர் வழங்கிய ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

எனவே எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழந்தார் என்று அறிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு கட்சிக்கும் 24 உறுப்பினர்கள் இல்லாத நிலையில், எந்தவொரு கட்சி தலைவரையும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

முதல் இணைப்பு

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் மைக்கேல் ராயப்பன், சாந்தி, அருண் பாண்டியன், சுந்தரராஜன், மாஃபா பாண்டியன், தமிழழகன், சுரேஷ், அருண்சுப்ரமணியன் ஆகியோர் இன்று காலை சபாநாயகர் தனபாலை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

இதேபோன்று பா.ம.க.வைச் சேர்ந்த அணைக்கட்டி கலையரசு மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை ராமசாமி ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதேவேளை நேற்று நடந்த தமிழக அரசியலின் திருப்பு முனை மாநாட்டில் கூட்டணி குறித்த எந்தவித தகவலையும் விஜயகாந்த் வெளியிடாத நிலையில் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜெயலலிதாவை பிரேமலதா விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

இதனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



தேமுதிக எம்எல்ஏ-க்கள் எட்டு பேர் ராஜினாமா! எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த்... Reviewed by Author on February 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.