அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம் பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது-மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் கவலை.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம் பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில் குற்றவாழிகள் சுதந்திரமாக நடமாடித்திரிவதாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம் பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று திங்கட்கிழமை (29) காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,

அண்மைக் காலமாக நாட்டின் பல பகுதிகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையும்; கொலைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையை பெண்கள் அமைப்புக்களாகிய நாங்கள் மிகுந்த அசொளகரியத்துடன் அவதானித்து வருகின்றோம்.

 சமூகத்தில்; குறிப்பாகப் பெண்களை மற்றும் சிறுமிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற இப்பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாகப் பெண்கள் சிறுமிகள் சுதந்திரமாக நடமாடமுடியாதுள்ளதுடன், சிறுமிகள் பாடசாலை செல்ல முடியாத அபாயகரமான சூழலும் தோன்றியுள்ளது.
 அதேநேரம் வீட்டிலே தனித்திருக்கவோ அல்லது இரவு வேளைகளில் உறங்கவோ முடியாத துர்ப்பாக்கிய நிலையை இன்று எமது நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்களும் அனுபவிக்கின்றனர்.
எமது நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக வடகிழக்கு மக்கள் கடந்த 30 வருடங்களாக வன்முறைக்கு உட்பட்ட கலாசாரத்திற்குள்ளேயே வாழ்ந்து வந்தனர்.

இந்த யுத்தமில்லாத காலத்திலும் பெண்களுக்கெதிhன வன்முறைகள் தொடர்ந்தும் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் யுத்தத்துடன் தொடர்புபட்ட பாரிய பெண்களுக்கெதிரான குற்றங்கள் தண்டிக்கப்படாது காணப்படுகின்றது.

அத்துடன் பெண்களுக்கெதிரான குற்றங்களை அரசும் அதன் கட்டமைப்புக்களும் உதாசீனம் செய்வதையும் காண முடிகின்றது.

இந்த யுத்தத்தின் கோரவடுக்களை அதிகளவில் சுமந்து வாழ்பவர்கள் பெண்களே.
இப்பெண்கள் மீண்டும் பாதுகாப்பின்றி வாழ்வதற்குப் பலவந்தப் படுத்தப்பட்டுள்ளனர்.
எல்லா சமூகத்தினரும் குறிப்பாக தமது பெண் பிள்ளைகளது பாதுகாப்புக் குறித்து அச்சத்துடனும் கலவரமான மன நிலையுடனும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எமது நாட்டில் வாழ்கின்ற பெண்கள் தமது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காகத் தாமும் ஒரு தொழிலைத் தேடிச் செய்ய வேண்டிய அத்தியாவசியத் தேவையில் உள்ளனர்.

குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் பெண்கள் தமது பெண்பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக தொழில் செய்யச் செல்வதற்குக் கூட அச்சப்பட வேண்டியுள்ளது.

  இது இவர்களது வாழ்க்கையைப் பசி பட்டினியுடன் வாழ்வதற்குத் தள்ளுவதுடன் அதனூடாக பெண்களது பாதுகாப்பு மற்றும் கௌரவமும் கேள்விக் குட்படுத்தப்படுகின்றது.

 இது இவர்களின் சுய கௌரவத்துடனான வாழ்தலுக்கான உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
வன்முறைக்கு முகங்கொடுத்த பெண்களுக்கு நீதிகிடைப்பது என்பது இலங்கையில் அரிதான ஒன்றாகவே இருந்து வருகின்றது.
 பாலியல் வல்லுறவு வழக்குகளில் மிகவும் வெளிச்சத்திற்கு வருகின்ற சில வழக்குகளைத் தவிர ஏனைய வல்லுறவுச் சம்பவங்களில் வன்செயலை நிகழ்த்தியோர் அரிதாகவே சிறையில் அடைக்கப்படு கின்றனர்.

 பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாகக் காணப்படும் சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறும் கலாசாரமானது பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய கரிசனையைக்  குறைப்பதாகவே காணப்படுகின்றது.
ஆகவே, இவ்வாறான பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் கொலைச் சம்பவங்களானது நாட்டின் அபிவிருத்திக்கும்,மனித கௌரவத்திற்கும் இழுக்கான விடயங்களாகும்.

தற்காலத்தில் அரசால் முன்னெடுக்கப்படும் நிலை மாற்றுக்கான நீதி சம்பந்தமான திட்டங்களில் பின்வரும் வழி மொழிதல்களை உள்வாங்குவது அத்தியாவசியமானதென நீதிக்காகப் போராடுகின்ற வடக்கைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள் கருதுகின்றோம்.
முன்மொழிவுகள்
இந்தநாட்டில் உள்ளபெண்கள் சிறுமிகளுக்கெதிரானபாலியல் வன்முறைசம்பந்தமானவழக்குகளின் சட்டமானதுமீள் திருத்தத்திற்குஉட்படுத்தப்படல் வேண்டும். அதாவதுதிருத்தப்படும் சட்டத்தில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குபிணைவழங்கமுடியாதகுற்றமாக்குதல்வேண்டும்.
பெண்கள் சிறுமிகளுக்கெதிரானபாலியல் வன்முறைசம்பந்தமானவழக்குகளில் குற்றமானதுஒருவருடகாலத்தில் விசாரிக்கப்பட்டுதீர்ப்புவழங்கப்படுதல் வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானகுற்றங்களைவிசாரிக்கஒவ்வொருமாவட்டத்திலும் சிறப்புநீதிமன்றங்கள் அமைக்கப்படுவதுடன்,அந்நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டோர்களதுபாதுகாப்புஉறுதிப்படுத்தப்படுவதோடு,அவர்களதுசுய தனித்துவம் பாதிக்கப்படாதவகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படல்வேண்டும்.
'சுருக்கமுறைவிசாரணை'அகற்றப்பட்டுமாவட்டநீதிமன்றில் அல்லதுஉயர் நீதிமன்றில் பாலில் வல்லுறவுதொடர்பானவழக்குகளதுவிசாரணைகள்மேற்கொள்ளப்படல்
கடந்தகாலங்களில் சட்டமாஅதிபர் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ளபாலியல் வல்லுறவுசம்பந்தமானவழக்குகளைத் துரிதவிசாரணைகளைநிகழ்த்துவதன் மூலம் தீர்ப்பளித்தல்
நீதியைஅமுல்படுத்தும் அமைப்புகளாகியகாவற்துறை,நீதிமன்றம்,சட்டமாஆணையாளர் திணைக்களம் மேலும் நீதியமைச்சுபெண்கள் விவகாரஅமைச்சு,சிறுவர் பாதுகாப்புஅதிகாரசபைமற்றும் சிறுவர் பாதுகாப்புமற்றும் நன்னடத்தைஆணைக்குழு போன்றகட்டமைப்புகள் அனைத்தும் பெண்கள் சிறுவர்கள் தொடர்பாகத் தற்போதுள்ளநடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதுடன் இக்கட்டமைப்புகள் ஆனவைபால்நிலைக் கூருணர்வுடன் எவ்விதபாரபட்சமுமின்றிச் செயற்படும் விதத்தில் கட்டமைப்புகள் திருத்தப்படல் வேண்டும்.  குறிப்பாகத் தமிழ் மொழிபேசும் உத்தியோகத்தர்களைஉடனடியாகநியமிக்கப்படல் வேண்டும்.
பெண்கள் உரிமைமீறல்களைஆய்வுசெய்வதற்கானசுயமானஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு இக்குழுவானதுபெண்களுக்கெதிராகநடைபெறும் சகல வன்முறைகளைத்தடுப்பதற்கான திட்டங்களை துரிதகதியில் அமுல் படுத்துவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருத்தல் வேணடும்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது



-மன்னார் நிருபர்-
-29-02-2016

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம் பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது-மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் கவலை. Reviewed by NEWMANNAR on February 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.