மன்னார் திருக்கேதீஸ்வரம் விபத்தில் மூவர் படுகாயம்----08 -3- 2016, முழுமையான படங்கள் இணைப்பு...
திருக்கேதீஸ்வரம் பகுதயில் இடம்பெற்ற விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை, 08 மார்ச் 2016, இரவு 09 மணியளவில்இடம்பெற்றுள்ளது.
திருக்கேதீஸ்வரத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், திருக்கேதீஸ்வரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த வவுனியா புதுக்குளம் பகுதியைவைச் சேர்ந்த, கே.ரஜிகரன் (24), விக்னோஸ்வரன் (26), செவ்வராஜா (32) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். மயக்கமான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் விபத்தில் மூவர் படுகாயம்----08 -3- 2016, முழுமையான படங்கள் இணைப்பு...
Reviewed by Author
on
March 08, 2016
Rating:
Reviewed by Author
on
March 08, 2016
Rating:








No comments:
Post a Comment