400 வருடங்களாக மழையே பெய்யாத அட்டகாமா பாலைவனம்..
தென்னமெரிக்காவின் மிகப்பெரிய பாலைவனம் அட்டகாமா. அந்தீஸ் மலைக்கு மேற்குப் பகுதியில், தென்னமெரிக்காவின் இரு பிரதான நாடுகளான பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கிடையே, பசிபிக் கடற்கரையோரம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் நீளமும் சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பும் கொண்டு விரிந்து பரந்திருக்கிறது இது.
இதன் பெரும்பகுதி கற்களால் நிறைந்தது. இடையிடையே உப்பு ஓடைகளும், மணலும் அந்தீஸிலிருந்து குமுறும் எரிமலையிலிருந்து சீறிப் பாய்ந்து காய்ந்து போயிருக்கும் எரிகற்குழம்புப் படிமங்களும் நிறைந்திருக்கின்றன.
எப்போதும் காய்ந்து போயிருக்கும் இந்தப் பாலைவனத்தில் 2011-ஆம் ஆண்டு ஒரு பெரும் பனிமழை பெய்தது. இதனால் சுமார் 31 அங்குல அளவுக்கு பனிக்கட்டிகள் இந்தப் பாலைவனத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. இதனால், இப்பாலைவனத்தை ஊடறுத்துச் செல்லும் பல நாட்டு மக்களும் பெரும் அவஸ்தைக்குள்ளாயினர்.
கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி, இந்தப் பாலைவனத்தின் தென்பகுதியில் பெய்த கன மழையால் சேறும் சகதியும் கலந்த மழை நீரால், சிலி, கோப்பியாகோ, டியெர்ரா அமாரில்லா எனப் பல நாடுகளும் பாதிக்கப்பட்டன. சுமார் 100 பேர் உயிரிழந்தனர். ஆனால், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 1570-ஆம் ஆண்டு முதல் 1971-ஆம் ஆண்டு வரையிலான சுமார் நானூறு வருடங்களாக இந்தப் பகுதியில் மழையே பெய்யவில்லை என்பது ஆச்சரியமான உண்மைதான்!
400 வருடங்களாக மழையே பெய்யாத அட்டகாமா பாலைவனம்..
Reviewed by Author
on
March 28, 2016
Rating:

No comments:
Post a Comment