பெண்ணுலகிற்கு பெருமை சேர்த்த கல்பனா சாவ்லா! சிறப்பு
விண்வெளிக்கு பயணம் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற புகழால், இந்தியாவுக்கும் பெண்ணுலகிற்கும் பெருமை சேர்த்தவர் கல்பனா சாவ்லா. இந்தியாவின் பிரபலமான விமான ஓட்டியும் தொழிலதிபருமான ஜே.ஆர்.டி.டாடாவை பார்த்ததிலிருந்தே கல்பனாவுக்கு விமானம் ஓட்டும் ஆசை ஊற்றெடுத்தது.
வெற்றிகரமான முதல் விண்வெளி பயணத்தில் 10.67 மில்லியன் கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளார். 252 முறைகள் விண்வெளியில் இருந்துகொண்டு பூமியை சுற்றியுள்ளார். இதற்காக அவர் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்துள்ளார்.
இரண்டாவது விண்வெளிப் பயணம் 2000 ல் வந்தது.கல்பனா உட்பட ஏழு பேர்கொண்ட குழுவுடன் 2003 ல் பூமியை வந்தடைய 15 நிமிடமே இருந்த நிலையில், விண்கலம் நான்காக பிளந்து இரண்டு பெண்கள் உட்பட்ட 7 விண்வெளி வீரர்களும் பலியானார்கள்.
ஒரு சாதாரண பள்ளியில் படிப்பை தொடங்கி, நாசா, விண்வெளிப் பயணம் என 40 வயதுக்குள்ளே, நம்பவே கடினமான ஒரு உயரிய வாழ்க்கையை உலக வரலாற்றில் விட்டுச் சென்றது வியப்பே!.
பெண்ணுலகிற்கு பெருமை சேர்த்த கல்பனா சாவ்லா! சிறப்பு
Reviewed by Author
on
March 18, 2016
Rating:

No comments:
Post a Comment