உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்
பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, லண்டனில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான 'வாட்டர் எய்டு' , அமைப்பு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கிடைக்கும் சுத்தமான குடிநீரின் அளவு, தரம் போன்றவை தொடர்பாக ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 5% பேருக்கு, அதாவது 7.6 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. தண்ணீர் பிரச்சனையால் உண்டாகக்கூடிய வயிற்றுப்போக்கின் காரணமாக, ஆண்டுதோறும் இங்கு 1.4 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்தியாவில் பாதுகாப்பட்ட குடிநீரை குடிக்கும் மக்கள், சுத்தமான குடிநீரை வியாபாரியிடமிருந்து பெற, ஒரு லிட்டர் குடிநீருக்கு 1 ரூபாய் செலவிட வேண்டியது வரும். தண்ணீர் பற்றாக்குறையை பொருத்து, சில நேரங்களில் இத்தொகை இரட்டிப்பாகும். நீர் வளங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால்தான் இந்திய மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. வரும் 2030-ம் ஆண்டுவாக்கில் 40 சதவீதம் இந்தியர்கள் குடிக்க பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் உள்ளன. பாகிஸ்தான் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்
Reviewed by Author
on
March 28, 2016
Rating:

No comments:
Post a Comment