அண்மைய செய்திகள்

recent
-

மின்தடைக்கான நேர அட்டவணை இதோ....


அடுத்து வரும் இரு தினங்களுக்கு நாடு பூராகவும் 7 1/2 மணித்தியால மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மின்சாரத்தடை இரு பகுதிகளாக மேற்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை புதன்கிழமையும் வியாழக்கிழமையும் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையும் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரையும் ஒரு பகுதி மின்வெட்டும் நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 6 மணிவரையும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரையும் மற்றை பகுதி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் படி பகல் வேளைகளில் 5 1/2 மணித்தியாலங்களும் இரவு வேளைகளில் 2 மணித்தியாலங்களும் நாளொன்றுக்கு மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்தடைக்கான நேர அட்டவணை இதோ.... Reviewed by Author on March 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.