மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என்று கூறி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் மீட்பு,,,
இலங்கையில் மனிதக்கடத்தில் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பெண்கள் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.
இவர்களில் ஆறு இளம் வயது யுவதிகளும் இருந்தனர்.
இவர்கள், எம்பிலிபிட்டிய, மொனராகலை மற்றும் தெனியாய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் பலாத்காரமாக சுமார் ஆறு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்துக்காக சில உப முகவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
மருதானையின் பல தங்குமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்தப் பெண்கள் மீட்கப்பட்டனர்.
இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பை பெறும் நோக்கிலேயே பயண முகவர்களிடம் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த பல போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து அம்பாறை, அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்தவரான பிரதான உப பயண முகவர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என்று கூறி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் மீட்பு,,,
Reviewed by Author
on
March 24, 2016
Rating:

No comments:
Post a Comment