சாதாரண தரப்பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்த வந்தாறூமூலை ம.மகா வித்தியாலய மாணவி!
வெளியிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் மட்டக்களப்பு சித்தாண்டியில் அமைந்துள்ள மட்/வந்தாறூமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவி முதன் முதலாக9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/வந்தாறூமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற மாணவி செல்வி பா.தனுஷ்கா என்பவரே இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
செல்வி பா.தனுஷ்கா திரு இ.பாஸ்கரன்((கிழக்கு பல்கலைக்கழக நூலக உதவியாளர்) திருமதி ப.பாஸ்கரன் (ஆசிரியர்) தம்பதிகளின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதாரண தரப்பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்த வந்தாறூமூலை ம.மகா வித்தியாலய மாணவி!
Reviewed by Author
on
March 24, 2016
Rating:

No comments:
Post a Comment