இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தலைமன்னார் புகையிரதத்தில் தபால் பொதிகள் எடுத்துச்செல்லப்படுகின்றன. 2.3.2016
சுமார் இருபத்தைந்து ஆண்டு காலத்துக்குப்பின் தலைமன்னார் புகையிரதத்தில் தபால் பொதிகள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் மன்னார் பகுதியில் தபால் விநியோகம் நேரத்துடன் விநியோகிக்கப்படுவதையிட்டு மக்கள் மற்றும் திணைக்களங்கள் மகிழ்ச்சி கொள்கின்றன.1990ம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் பகுதியில் யுத்த சூழ்நிலை உச்சக்கட்டத்தில் இருந்ததைத் தொடர்ந்து கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
பின் மன்னார் தீவு இராணுவ கட்டுப்பாட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபின் மன்னார் தீவுக்கும் வெளிமாவட்டங்களுக்கும் தரைமார்க்க வழிகள் தடைப்பட்டிருந்தபோதும் இக்காலக்கட்டத்தில் மன்னாருக்கான தபால் பொதிகள் கொழும்பிலிருந்து கல்பிட்டியூடாக மன்னார் தென்கடல் வழியாக படகுகளின் மூலம் கொண்டுவரப்பட்டன.
இதன்பின் மன்னார் மாவட்டம் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மன்னார் தபால் பொதிகள் கொழும்பு மதவாச்சி புகையிரதத்தில் எடுத்துவரப்பட்டு பின் அவைகள் வவுனியா தபாலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து மூலம் இவ் தபால் பொதிகள் மன்னாருக்கு கொண்டவரப்பட்டன. இதனால் இக்காலக்கட்டத்தில் தபால் விநியோகம் ஓரிரு தினங்கள் காலதாமதமாகி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மன்னாருக்குகான தபால் விநியோகத்தை துரிதப்படுத்தும் நோக்குடன் தபால் திணைக்களம் கடந்த சுமார் ஐந்து வருடங்களாக இவ்வாறு கொண்டுவரப்பட்ட தபால் பொதிகளை வவுனியாவிலிருந்து மன்னாருக்கு தபால் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனத்தில் எடுத்துவரப்பட்டு தபால் விநியோக கால தாமதத்தை நிவர்த்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் கடந்த வருடம் 14.03.2015 இந்திய பிரதமரால் தலைமன்னார் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டும் கடந்த ஒரு வருடமாக தபால் பொதிகளை இவ் புகையிரத சேவை மூலம் எடுத்தவராத நிலையிருந்தபோதும் தற்பொழுது கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவைகளின் மூலம் செவ்வாய் கிழமை (01.03.2016) முதல் தபால் பொதிகள்; அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை தபால் திணைக்களம் நட எடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து செவ்வாய் கிழமை (2) முதல் மன்னார் மாவட்டத்துக்கான தபால் பொதிகள் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் தலைமன்னாருக்கு கிடைக்கப்பெறுகின்றன.
இதனால் அதிகாலையிலே தபால்கள் இப்பகுதியை அடைந்து விடுவதால் இப்பகுதியிலுள்ள தபாலகங்களில் தபால் விநியோகம் ஏழு மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தலைமன்னார் புகையிரதத்தில் தபால் பொதிகள் எடுத்துச்செல்லப்படுகின்றன. 2.3.2016
Reviewed by Author
on
March 02, 2016
Rating:
Reviewed by Author
on
March 02, 2016
Rating:




No comments:
Post a Comment