அதிக வேகத்தினால் ஏற்பட்ட விபரீதம்....
மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடி ஜூஸ்லா பாமசிக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயது அபுல் ஹசன் முஹம்மட் ஒஸாமா மரணமடைந்துள்ளார்.
மேற்படி விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
ஆரையம்பதி இருந்து மட்டக்களப்பை நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது.
இதனையெடுத்து விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் வைக்கிள் ஒட்டுனரான மௌலவி அபுல் ஹசன் முஹம்மட் ஒஸாமா ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அஹமட் றுஸ்னி எனும் 15 சிறுவன் கை உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு துரிதமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிக வேகத்தினால் ஏற்பட்ட விபரீதம்....
Reviewed by Author
on
March 19, 2016
Rating:
No comments:
Post a Comment