சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க நூதன முயற்சியில் இறங்கும் பிரான்ஸ்,,,,
பிரான்ஸ் நாட்டில் உள்ள சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் நூதன முயற்சியில் இறங்கியுள்ளது.
உலகளவில் சிகரெட் பிடிப்பதனால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்தும் செயலில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன.
இந்நிலையில் சிகரெட் உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் முத்திரைகளோ, வண்ண நிறங்கள் இல்லாத பெட்டிகளில் மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசாணையை பிரான்ஸ் அரசு பிறப்பித்தது.
சிகரெட் பெட்டிகளின் அழகால் புகைப் பிடிப்போர் கவரப்படுவதைத் தவிர்க்கவும், புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கவும் இந்த உத்தரவை பிரான்ஸ் அரசு பிறப்பித்துள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக "ஜப்பான் டொபாக்கோ இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பிரான்ஸ் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த திட்டம் தற்போது அவுஸ்திரேலியாவில் புழக்கத்தில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அந்நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பிரித்தானியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க நூதன முயற்சியில் இறங்கும் பிரான்ஸ்,,,,
Reviewed by Author
on
March 24, 2016
Rating:

No comments:
Post a Comment