அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகள் மத்தியில் ஆய்வு, பலாத்கார நடவடிக்கையா? அகதிகள் அச்சம்,,,


தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் மத்தியில் அவர்கள் முன்னைய நடவடிக்கைகள், கடவுச்சீட்டு விபரங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை அறிந்துக்கொள்வதற்காக அவர்கள் மத்தியில் கேள்விக்கொத்துகள் விநியோகிக்கப்படுவதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நம்பப்படுகிறது.

தமிழக பொலிஸார் இதனை அறிந்துள்ள நிலையில் அவர்களும் இதற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து தமக்கு முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கேள்விக்கொத்தில் உள்ள கேள்விகளில் இலங்கைக்கு திரும்ப விரும்புகிறீர்களா? இந்தியாவில் இருக்க விரும்புகிறீர்களா? அல்லது வேறு நாடு ஒன்றுக்கு செல்ல விரும்புகிறீர்களா? என்ற கேள்விகளும் உள்ளடங்கியுள்ளன.

இந்தநிலையில், குறித்த நடவடிக்கையானது, தம்மை பலாத்காரமாக இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையாக இருக்குமா? என இலங்கை அகதிகள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அகதிகள் மத்தியில் ஆய்வு, பலாத்கார நடவடிக்கையா? அகதிகள் அச்சம்,,, Reviewed by Author on March 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.