ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவிருக்கும் அடுத்த நாடு எது?
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்து மற்றும் பிரான்சின் ஈபிள் கோபுரம் மீது தாக்குதல் நடத்தவிருக்கிறோம் என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவுக்கு "அவநம்பிக்கை மேற்கத்திய நாடுகள்" என தலைப்பிட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் ‘ஈபிள் கோபுரம்’ குண்டு வைத்து தகர்க்கப்பட்டு தரையில் சாய்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ரத்த ஆறு ஓடி அது அமெரிக்காவின் டொலர் நோட்டுகள், துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வைக்கப்பட்டுள்ள மர மேஜையின் மீது துளிதுளியாக விழுவது போன்று அனிமேசன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைனில் அடுத்தபடியாக எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதரவாளர்களிடம் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அதிக ஆதரவு வாக்குகள் விழுந்தன. மேலும் அடுத்தபடியாக ஈபிள் கோபுரத்தில் எந்த கலரில் வெளிச்சம் வீச செய்ய வேண்டும் என்றும் ஓன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
ஏனெனில் சமீபத்தில் பிரசல்ஸ் நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஈபிள் கோபுரத்தில் பெல்ஜியம் தேசிய கொடியின் நிறம் விளக்குகள் மூலம் ஒளிரூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவிருக்கும் அடுத்த நாடு எது?
Reviewed by Author
on
March 27, 2016
Rating:

No comments:
Post a Comment