அண்மைய செய்திகள்

recent
-

10 வருடங்களின் பின் எங்கள் வகுப்பறையில்: சம்பூர் மாணவர்கள்...

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினரின் வசமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 177 ஏக்கர் காணியில் அமைந்திருந்த சம்பூர் மகா வித்தியாலயம் 10 வருடங்களின் பின்னர் இன்று முதல் மீளவும் செயற்படத் தொடங்கியுள்ளது.
சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள காளி கோவிலில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று, பின்னர் இவ்வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு 13 வரை கற்கின்ற 411 மாணவர்களுடன் 21 ஆசிரியர்களும் இவ்வித்தியாலயத்துக்கு சமூகமளித்துள்ளனர்.

அத்துடன், இவ்வித்தியாலயத்தில் முதலாம் தவணைப் பரீட்சையும் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், மீள்குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த புதிய மாணவர்கள் 11 பேர் இவ்வித்தியாலயத்தில் சேர்ந்துள்ளதாகவும் அவ்வித்தியாலய அதிபர் எஸ்.பாக்கியசீலன் தெரிவித்தார்.

படையினரின் பராமரிப்பிலிருந்த இவ்வித்தியாலயமும் அதன் வளாகமும் நல்ல நிலையிலிருப்பதாகத் தெரிவித்த அதிபர், இவ்வித்தியாலயத்துக்கு மின்சார வசதி இல்லையெனவும் கூறினார்.

இவ்வாறிருக்க, கட்டடம் சேதமடைந்து காணப்படும் சம்பூர் ஸ்ரீ முருகன் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சுமார் 75 பேரும் சம்பூர் மகா வித்தியாலயத்தின் ஒருபகுதியில் தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, சம்பூர் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



10 வருடங்களின் பின் எங்கள் வகுப்பறையில்: சம்பூர் மாணவர்கள்... Reviewed by Author on March 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.