கல்மடுவில் ஆலயத் திருவிழாவில் பொலிசார் மீது தாக்குதல்
வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையால் காயமடைந்த பொலிசார் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது இரு இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதன்போது அங்கு கடமையில் நின்ற ஈச்சங்குளம் பொலிசார் குறித்த முரண்பாட்டை சமரசம் செய்து வைத்து தடுக்க முற்பட்ட வேளை பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பொலிசார் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா, ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் இதுவரை எவரும் கைதாகவில்லை.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது இரு இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனால் பொலிசார் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா, ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் இதுவரை எவரும் கைதாகவில்லை.
கல்மடுவில் ஆலயத் திருவிழாவில் பொலிசார் மீது தாக்குதல்
Reviewed by NEWMANNAR
on
March 28, 2016
Rating:

No comments:
Post a Comment