அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண விவசாய அமைச்சினால் 641 பேருக்கு வாழ்வாதார உதவிகள்....


வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641 பேருக்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கப்பட்டது.  வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.  வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டன.  மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 641 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், ஆடுகள், மாடுகள், வேலி அடைக்கும் முற்கம்பிகள் என்பன இதன்போது வழங்கப்பட்டன.  கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவியாக இவை வழங்கி வைக்கப்பட்டன. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, ம.ஜெயதிலக, விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன், கால்நடை விவசாய திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








வடமாகாண விவசாய அமைச்சினால் 641 பேருக்கு வாழ்வாதார உதவிகள்.... Reviewed by Author on April 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.