மன்னார் விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு-Photos
கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த.சாதாரண தரப்பரிட்சையில் அதியுயர் சித்திகளைப் பெற்ற மன்னார் விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை காலை விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
'விடத்தல் தீவு ஜேம்ஸ் றீற்றம்மாள்,சுதாஜினி உதவிக்கரம்' அமைப்பின் உதவியுடன் இடம் பெற்ற குறித்த சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வின் போது அதியுயர் சித்திகளைப் பெற்ற மன்னார் விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள் 4 பேர் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், கௌரவ விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் விடத்தல் தீவு பங்குத்தந்தை அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு சாதனையாளர்களை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
April 20, 2016
Rating:
No comments:
Post a Comment