அண்மைய செய்திகள்

recent
-

கரைச்சிப் பிரதேசசபையின் கழிவகற்றல் நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு!


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் நடவடிக்கையானது உரிய முறைப்படி நடைபெறுதில்லை என பல தரப்பினராலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கழிவகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதுமான இடவசதி மற்றும் உரிய வளங்கள் இல்லாமல் உள்ளதாக பிரதேச சபையினரால் காரணம் கூறப்பட்டு வந்தது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்ட்டதை அடுத்து, கரைச்சி பிரதேசசபை செயலாளர் கம்சநாதன், உள்ளுராட்சி ஆணையாளர் பிரபாகரன் ஆகியோருடன் பிரதேச சபையால் கழிவுகள் கொட்டப்படும் ஆனையிறவு உமையாள்புரம் பகுதிக்கு நேற்று சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கழிவு கொட்டப்படும் முறை தொடர்பில் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்தார்.

மேலும் குறித்த பகுதியில் கழிவுகள் ஒழுங்கீனமான முறையில் கொட்டப்பட்டிருந்தததை அவதானிக்க முடிந்ததுடன் சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதனையும் பாராணுமன்ற உறுப்பினரால் காண முடிந்தது.

இதனையடுத்து கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேசசபை செயலாளர் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பிரதேசசபையால் அகற்றப்படும் கழிவுகளை ஒழுங்கீனமான முறையில் கொட்டி சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை மீள்சுழற்சிக்குட்படுத்தி விவசாய நடவடிக்கைக்கு ஏற்ற பசளைகளை தயாரிப்பதற்கு உரிய திட்டமிடலை மேற்கொள்வதற்கும், சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கரைச்சி பிரதேசசபையால் உமையாள்புரம் பகுதியில் பரந்துபட்ட பிரதேசத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் சூழலுக்குப்பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






கரைச்சிப் பிரதேசசபையின் கழிவகற்றல் நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு! Reviewed by Author on April 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.