ஆண் குழந்தை பிறந்துவிட்டது: தாயகம் திரும்பிய கிறிஸ் கெய்ல்....
ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் கெய்லுக்கு குழந்தை பிறந்துள்ள காரணத்தால் அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
பெங்களூரு அணி, 2 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (ஐதராபாத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (டெல்லிக்கு எதிராக) கண்டுள்ளது.
இந்நிலையில், இந்த அணியில் இடம்பெற்றிருந்த கெய்லின் மனைவி நடாஷா பெரிட்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கெய்ல் அவசரமாக தாயகம் திரும்பி விட்டார்.
கெய்ல்-நடாஷா தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும். இன்றைய ஆட்டம் மட்டுமின்றி, அடுத்த ஆட்டத்திலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.
கெய்ல் இல்லாத நிலையில் அணித்தலைவர் கோஹ்லி,டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது.
கெய்லுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ஆண் குழந்தை பிறந்துவிட்டது: தாயகம் திரும்பிய கிறிஸ் கெய்ல்....
Reviewed by Author
on
April 20, 2016
Rating:
Reviewed by Author
on
April 20, 2016
Rating:



No comments:
Post a Comment