அண்மைய செய்திகள்

recent
-

பகலில் பள்ளி மாணவி...இரவில் பாலியல் தொழிலாளி! உடலை விற்கும் கொடுமை....





ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கல்விக்காக சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை தங்களது உடலை விற்று காசு பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பள்ளிகளில் கட்டணமாக ஆண்டுக்கு 40 பவுண்டுகள் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் அடிப்படை கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என்பதாலும் பெரும்பாலான இளம் வயது பெண்கள் தங்களை விற்று பள்ளிக்கு செல்கின்றனர்.

தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் இருப்பதால் சில பெண்கள் முழுநேர விபச்சாரத்தில் ஈடுபடும் கொடிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிப்படிப்புக்கான கட்டணத்தை செலுத்துவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியரையும் இளம் வயது பெண்களையும் சீரழிக்கப்படும் அவல நிலையும் இங்கும் பரவலாக உள்ளது.

போதிய விழிப்புணர்வு இல்லாமையால் கருத்தரிக்க நேரிடும் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஆண் சமூகம் கைநழுவுவதும், இதனால் தமது குழந்தைக்கும் தமக்கும் என மிக குறைவான ஊதியம் பெறும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலும் பெண்கள் தள்ளப்படுகின்றனர்.

இங்குள்ள பல இளம் வயது பெண்களும் இரவில் பாலியல் தொழில் செய்துவிட்டு பகலில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளாக உள்ளனர்.

இரவு முழுவதும் கண்விழித்தால் ஒரு இளம் வயது பெண்ணால் 9 பவுண்டுகள் வரையே ஈட்ட முடியும் என்ற நிலையில், அந்த 9 பவுண்ட் பணத்தில் உணவு, உடை, புத்தகம், பள்ளி சீருடை மற்றும் கல்வி கட்டணம் என அனைத்தையும் சமாளித்தாக வேண்டும்.

இதுபோன்ற நிலையில் தவிக்கும் இளம் வயது பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் அமைப்பு ஒன்று தெருவோர குழந்தைகள் என்ற இயக்கத்தின் வாயிலாக மகளிர் கல்வியை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

ஒட்டுமொத்தமாக 20,000 சியரா லியோன் சிறுமிகள் முதல் இளம் வயதுபெண்களுக்கு கல்வியை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் இந்த அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

பகலில் பள்ளி மாணவி...இரவில் பாலியல் தொழிலாளி! உடலை விற்கும் கொடுமை.... Reviewed by Author on April 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.