வடமராட்சியில் மூடப்பட்டிருந்த மதுபானசாலை! மீண்டும் இயங்க அனுமதி....
ஆளுநர் மற்றும் அரச அதிபரின் முயற்சியினால் வடமராட்சியில் பூட்டப்பட்ட மதுபானச்சாலையினை சட்டத்தின் பிரகாரம் தற்காலிகமாக இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பல்லாயிரக் கணக்கான வெடிகள் கொளுத்தி மிகப் பெரும் ஆராரத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பிரதான சிவன் ஆலயம் ஒன்றிற்கு மிக அருகிலும் மற்றும் வேறு சில காரணங்கள் தொடர்பிலும் முன்னாள் ஆளுநர் , மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு பிரதேச மக்களால் முறையிடப்பட்டிருந்தது.
இது குறித்து முன்னாள் ஆளுநர் மதுவரித் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இதன்போது குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் மேற்படி மதுபானசாலையின் அனுமதியினை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட முறைமையில் உள்ள சட்டக் குறைபாட்டினை சுட்டிக்காட்டிய மதுபானச் சாலையின் உரிமையாளர் நீதிமன்றினை நாடியிருந்தார்.
குறித்த தடை உத்தரவினை ஆராய்ந்த நீதிமன்றம் இது தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை தற்காலிகமாக இரண்டு மாத அனுமதியினை நேற்றைய தினம் வழங்கியிருந்தது.
இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து மதுக் கடை உரிமையாளர்களின் ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான வெடிகள் கொழுத்தப்பட்டு மிக ஆரவாரமாக மதுக்கடை திறக்கப்பட்டது.
இதனை கண்ட அயல் மக்கள் தண்ணி வித்த காசு எமது வயிறு எரிவதுபோல் நெருப்பாக புகைகின்றது என விசனம் தெரிவித்தனர்.
வடமராட்சியில் மூடப்பட்டிருந்த மதுபானசாலை! மீண்டும் இயங்க அனுமதி....
Reviewed by Author
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment