இந்தியாவிலேயே பணக்கார கட்சி எது தெரியுமா?
இந்தியாவிலேயே பணக்கார கட்சி என்ற பெயரை பெற்று பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி-க்கு 2014-15க்கான ஆண்டு வருமானம் 970 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அதன் ஆண்டு வருமானம் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், இந்தியாவில் மொத்தமுள்ள 6 தேசிய கட்சிகளின் வருமானத்தில் இதில் 76 சதவீதம் என்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
சி.பி.ஐ.யின் வருமானம் சுமார் 1.75 கோடியாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் 45 கோடி ரூபாயாகவும் உள்ளது.
தேசிய கட்சிகள் வருமான விவரங்களை தாக்கல் செய்வது தேர்தல் ஆணைய விதிகளின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் கட்சிகள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்துள்ளன.
மேலும், தேசிய கட்சியான காங்கிரஸ் குறிப்பிட்ட நிதியாண்டுக்கான தனது வருமானத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை.
இந்தியாவிலேயே பணக்கார கட்சி எது தெரியுமா?
Reviewed by Author
on
April 20, 2016
Rating:

No comments:
Post a Comment