அண்மைய செய்திகள்

recent
-

காதல் சின்னத்தில் வைத்து கண்கலங்கிய பிரித்தானிய இளவரசர்!


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம் காதல் சின்னமான தாஜ்மஹாலில் வைத்து கண்கலங்கியுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் இந்தியா மற்றும் பூட்டான் நாட்டிற்கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இதில், இந்தியாவின் டெல்லியில் உள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலை பார்க்க சென்றுள்ளனர், அங்கு சென்றதும் தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இளவரசர் வில்லியம் கண்கலங்கியுள்ளார்.

ஏனெனில், இறந்தபோன தனது தாயான டயான இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தாஜ்மஹாலின் முன்னால் அமர்ந்து தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தனது தாயார் அமர்ந்த இடத்தினை பார்த்தும், வில்லியமுக்கு தனது தாயின் ஞாபகம் வந்துவிட்டதால், அந்த இடத்தில் அமர்ந்து புகைப்படம் எடுக்காமல் பின்வாங்கியுள்ளார்.

இதனைப்பார்த்த கேட், தனது கணவரை சமாதானப்படுத்தி டயான அமர்ந்த இடத்திற்கு அழைத்துச்சென்று, இருவரும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

1992 ஆம் ஆண்டு தனது கணவர் சார்லஸ்டன் இந்தியா வந்த டயானா, தாஹ்மஹாலின் முன்னர் தனியாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார், அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு சார்லஸை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





காதல் சின்னத்தில் வைத்து கண்கலங்கிய பிரித்தானிய இளவரசர்! Reviewed by Author on April 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.