அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிணறு தோண்டும் நடவடிக்கை இன்று கைவிடப்பட்டது...

 

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட கிணற்றை தோண்டும் நடவடிக்கைகள் இன்று  மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்ற போதும் அரச சட்ட வைத்திய அதிகாரி குறித்த பகுதிக்கு சமூகமளிக்காததன் காரணத்தினால் குறித்த கிணற்றை தோண்டும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று குறித்த கிணறு மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக அரச திணைக்களத்தில் இருந்து 13 நிறுவனங்களில் இருந்து உரிய அதிகாரிகள் குறித்த மனித புதைகுழி பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியொரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். அடையாளம் காணப்பட்ட குறித்த கிணற்றை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா வருகை தந்து பார்வையிட்டதோடு நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அரசாங்க சட்ட வைத்திய அதிகாரிகள் கொழும்பில் இருந்தும், மன்னாரில் இருந்தும் குறித்த இடத்திற்கு வருகை தராமையினால் குறித்த கிணற்றை தோண்டும் பணியினை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றம் இன்று  மாலை 2 மணியளவில் இவ்விடையம் குறித்து கலந்துரையாடுவதற்கு தவணையிட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் அரசாங்க திணைக்கள அதிகாரிகளாக அழைக்கப்பட்ட அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், தொல் பொருள் திணைக்களம், குண்டு வெடிப்பு பிரிவினர், மன்னார் பொலிஸார் உட்பட பல திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன் போது மன்னார் நீதவான் எ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது எதிர்வரும் 29 ஆம் திகதி குறித்த புதை குழு தொடர்பாக அழைக்கப்பட்ட அரச திணைக்கள பிரதி நிதிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதனைத்தொடர்ந்து குறித்த கிணற்றை தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 11 மணிக்கு மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறும் விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த கிணறு தோண்டுவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இன்று மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்ற குறித்த மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட கிணறு தோண்டும் நடவடிக்கைகள் இடம் பெற்ற போது காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன், சட்டத்தரணி ரனிதா ஞானராஜா மற்றும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிராய்வா, ஜெபநேசன் லோகு, துசித் ஜோன்தாசன் ஆகியோர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



மன்னார்திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிணறு தோண்டும் நடவடிக்கை இன்று கைவிடப்பட்டது... Reviewed by Author on April 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.