வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை----குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குங்கள்:
எனது மகளின் படுகொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத்தாருங்கள் என வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று பகல் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பணத்தில் சந்தித்திருந்தபோத தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருத்தி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார். இந்நிலையில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இதனை ஜனாதிபதியினால் கையளிக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்திருந்ததுடன் மகளின் கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலளார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.
வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை----குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குங்கள்:
Reviewed by Author
on
April 03, 2016
Rating:
Reviewed by Author
on
April 03, 2016
Rating:


No comments:
Post a Comment