அண்மைய செய்திகள்

recent
-

பட்டப்பகலில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய அரச அதிகாரி! கொழும்பில் சம்பவம்....


பிரபல சிங்கள ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று கொழும்பு-07 பிரதேசத்தில் வைத்து பட்டப்பகலில் அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவரினால் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு, கிருலப்பனையில் நடைபெற்றிருந்தது.

இதில் செய்தி சேகரிப்பதற்காக திவயின பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பௌத்தாலோக மாவத்தையின் ஊடாக அலுவலக வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.

இதன்போது அதிசொகுசு வாகனமொன்றில் பயணித்த நபர் ஒருவர் திடீரென வாகனத்தை முந்தி, இடைமறித்து மறுபக்கம் திரும்ப முயற்சித்துள்ளார்.

இதற்கு ஊடகவியலாளர் பயணித்த வாகனத்தின் சாரதி இடமளிக்காத நிலையில் சொகுசு வாகனத்தில் பயணித்தவர் தனது வாகனத்தை வீதியை மறித்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் ஊடகவியலாளர் மற்றும் அவரது சாரதியை குறித்த நபர் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத்தியுள்ளார்.

இதன்போது அப்பகுதியில் வீதிப் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்துக்கு வந்து, இருதரப்பினரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அவர் திரும்பிச் சென்ற கணநேரத்தில் சொகுசு வாகனத்தில் வந்த அரசாங்க உயர் அதிகாரி ஊடகவியலாளர் மீது தாக்குதல் தொடுத்துவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிப் போய் வாகனத்தில் ஏறி விரைந்துள்ளார்.

கொழும்பின் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பௌத்தாலோக வீதியில் நேற்று பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் நல்லாட்சி அரசாங்கத்திலும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர் கொள்ள நேரிட்டுள்ளமை குறித்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ஊடக நிறுவனத்தின் விசாரணையில் குறித்த சொகுசு வாகனத்தில் பயணித்த நபர் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புடைய ஒரு அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது.

பட்டப்பகலில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய அரச அதிகாரி! கொழும்பில் சம்பவம்.... Reviewed by Author on April 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.