அண்மைய செய்திகள்

recent
-

முல்லை.மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்!


இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலேய அதிகளவான மக்கள் வறுமையால் வாடுகின்றனர்.

இம்மாவட்ட மக்களின் வறுமையைப் போக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வறுமையால் அதிகம்பேர் உயிரிழந்த மாவட்டமாகவும் முல்லைத்தீவு உருவாகும் என வட மாகாண சபை உறுப்பினர்து.ரவிகரன் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு வறுமையால் வாடும் இந்த மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை மீட்பதா?அல்லது அவர்களைச் சாக விடுவதா? எனவும் அவர் வட மாகாண சபையில் நேற்றுக் கேள்விஎழுப்பினார்.

முல்லைத்தீவில் நிலவும் கடும் வறுமை நிலை தொடர்பில் வட மாகாண சபையில் ரவிகரன்நேற்று பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார். அந்தப் பிரேரணையை சமர்ப்பித்துஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி வறுமைக்கோட்டுக்குட்பட்ட 40 சதவீத மக்கள் வட மாகாணத்தில் வாழ்கின்றார்கள்.இலங்கையிலேயே மிகவும் வறுமையான மக்கள் அதிகம் வாழும் மாவட்டமாக முல்லைத்தீவு உள்ளது.இங்கு 28.8 வீத மக்கள் வறுமையால் வாடுகின்றனர்.

இதற்கு அடுத்த நிலையில் மன்னர் மாவட்டம் உள்ளது. இங்கு 20.1 வீத மக்கள் வறுமையின்பிடியில் உள்ளனர் எனவும் அவர் உலக வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டினார்.

கடல்வளம், நீர் வளம், நில வளம், காட்டு வளம், கனய வளங்கள், பனை, தென்னை வளங்கள்உட்பட அனைத்து வளங்களையும் கொண்ட முல்லைத்தீவு இவ்வாறு வறுமையின் பிடியில் உள்ளது.

கடந்த கால போரால் உடல் அவயங்களை இழந்தவர்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள்,பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் எந்தவருமானமும் இன்றி வாடுகின்றன எனவும் ரவிகரன் சுட்டிக்காட்டிக் கவலை வெளியிட்டார்.

கடற்றொழிலில் வெளி மாவட்ட மீனவர்களின் ஆக்கிரமிப்பு, விவசாயக் குளங்கள் பெருமளவுஇன்னமும் விடுவிக்கப்படாமை, தமிழர் நிலங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள், குளங்கள்புனரமைக்கப்படாமை, வன இலகாவினரின் அடாவடித் தனங்கள், தொழிற்சாலைகள்உருவாக்கப்படாமை போன்றவையும் முல்லைத்தீவின் வறுமை நிலைக்கு காரணங்கள் எனவும்ரவிகரன் தெரிவித்தார்.

எனவே, நீண்ட கால திட்டங்களின் ஊடாக மாவட்டத்தில் தனி நபர் வருமானத்தை அதிகரிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, ரவிகரன் கொண்டுவந்த இந்தப் பிரேரணை குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்காதுசபையின் அதிகளிவு நேரத்தை தேவையற்ற விடயங்களைப் பேசி உறுப்பினர்கள் சிலர் நேற்றுவிணடித்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லை.மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்! Reviewed by Author on May 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.