அண்மைய செய்திகள்

recent
-

லண்டன் சவுத்தோலில் தமிழர்களுக்கென உருவாகும் புதிய நிலையம்....


பிரித்தானியாவில், வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெரும்பாலான தமிழர்கள், சொந்த நாட்டு போர் சூழலினால் இடம் பெயர்ந்து வந்து இங்கே குடி புகுந்து தமது வாழ்க்கையை கொண்டு செல்கின்றார்கள் என்பது புதிய விடயமல்ல.

தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வந்தவர்கள் காலப்போக்கில் தமது பெற்றோர்களையும் இந்த நாட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள். ஆடிப் பாடி அடிமைப்படாது சுற்றி திரிந்த முதியவர்களின் வாழ்க்கை, வெளிநாட்டு வாழ்வில் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டது. தமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வேலை மற்றும் பாடசாலை சென்று திரும்பும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.

ஐம்பது, அறுபது ஆண்டுகள் இலங்கையிலே வாழ்ந்தவர்கள், லண்டனிலே புதிய மொழி, புதிய இடம், புதிய சமூகம், புதிய கலை கலாச்சாரங்களுக்கு உடனடியாக பொருந்த முடியவில்லை. இந்த பிரச்சனைகளை அறிந்து கொண்ட லண்டன் நகரங்களான Southall மற்றும் Hayes இல் வாழ்ந்து கொண்டிருந்த பெண்கள் ஒன்று சேர்ந்து 2010ஆம் ஆண்டில் அருணோதயம் தமிழர் சனசமூக மேம்பாட்டு நிலையம் (Sunrise Tamil Community Centre) என்கின்ற நிறுவனத்தை Southall Councillors மற்றும் MPக்களின் துணையோடும் ஏனைய தமிழ் மக்களின் ஆதரவோடும் ஆரம்பித்தனர்.

வீடுகளில் இருக்கும் முதியவர்கள் அனைவரும் இங்கே ஒன்று சேர்ந்து உரையாடுவதுடன், பலதரப்பட்ட விடயங்களும் இவர்களுக்காக இங்கே உண்டு. யோகா, உடற்பயிற்சி, தையல், புத்தகம் வாசித்தல் போன்றவற்றுடன் ஆங்கில வகுப்புகளும் இவர்களுக்காக இந்த நிறுவனம் இன்று வரைக்கும் வழங்கிக்கொண்டிருக்கிறது. வருடம் தோறும் ஆண்டுவிழாவும், முதியோருக்கான மெய்வல்லுனர் போட்டியும் நடைபெறும். இந்த நிறுவனத்தின் ஸ்தாபகரும், தோற்றுனரும் தலைவருமான திருமதி ஜெயச்சித்திரா அவர்கள், இந்த நிறுவனத்தின் பெயர் போல் ஒரு உதய சூரியனாக இந்த முதியவர்களுக்கு விளங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதியவர்களுக்கான நிலையமாக ஆரம்பித்து அதன் பின்னர் பெண்களுக்கான செயற்பாடுகளுடன் பெண்களுக்கான நிலையத்தையும், சிறுவர்களுக்கு தமிழ் மற்றும் கலை வளர்க்கும் பாடசாலையாகும் இன்று விஸ்தரித்து இருக்கிறது.

அருணோதயம் தமிழர் சனசமூக மேம்பாட்டு நிலையம், தமிழர்களுடைய பாரட்டுக்களை பெற்றது மட்டுமில்லாது, உள்ளூர் Councillourகள் மற்றும் MPக்களுடைய வாழ்த்துக்களையும் பெற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் தொழிலதிபர் Atul Pathak அவர்களால் சிறந்த சமூக வேலைக்கான பரிசையும் பெற்றிருக்கிறது.

ஆறாவது ஆண்டு நிறைவையும், தலைவர் திருமதி சித்திராவினுடைய பிறந்தநாளையும் இன்று இந்த Sunrise Tamil Community Centreல் கொண்டாடினார்கள். வெவ்வேறு இடங்களில் நடாத்தப் பட்டுக்கொண்டிருக்கும் முதியோர் இல்லம், பெண்கள் நிலையம் மற்றும் தமிழ் பாடசாலை ஞாயிறு 5ஆம் திகதி ஜூன் மாதத்தில் இருந்து அருணோதய நிலையத்தின் சொந்த இடத்தில் ஒன்றாக நடைபெறும் என்பதையும் அறிவித்தார்.

இந்த புதிய இடமானது, Southall Ealing MP திரு Virendra Sharma அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்களையும், இது போன்ற சமூக வேலைப்பாடுகளில் லங்காசிறியின் ஆதரவு என்றும் இருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

லண்டன் சவுத்தோலில் தமிழர்களுக்கென உருவாகும் புதிய நிலையம்.... Reviewed by Author on May 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.