இந்தியாவிலேயே அதிக எடையுடன் பிறந்த பெண் குழந்தை,,,
பெங்களூரில் 19 வயது பெண்ணுக்கு சுமார் 7 கிலோ எடையில், இந்தியாவிலேயே அதிக எடையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பெங்களூர் அருகே உள்ள Belur -ஐ சேர்ந்த நந்தினி என்ற 19 வயது பெண், கடந்த 23ம் திகதி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு மாலை 6.15 மணியளவில் சிசேரியன் முறையில், 6.82 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தியாவில் பதிவான தகவல்களின் படி, இந்த குழந்தை தான் இந்தியாவிலேயே அதிக எடையுடன் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது வழக்கத்திற்கு மாறானது என்பதால் தற்போது, குழந்தை ஏன் அதிக எடையுடன் பிறந்தது என்பதை அறிய கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிக எடையுடன் பிறந்த பெண் குழந்தை,,,
Reviewed by Author
on
May 27, 2016
Rating:

No comments:
Post a Comment