அண்மைய செய்திகள்

recent
-

ஜோகோவிச், மெஸ்ஸியை முந்தி சாதனை படைத்த விராட் கோஹ்லி!


இந்திய டெஸ்ட் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி, உலகளவில் விற்பனைக்குரிய விளையாட்டு வீரராக (Marketable Sportsperson) சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

‘SportsPro’ என்ற விளையாட்டு பத்திரிக்கை நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதில் முதலிடத்தை NBA கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீபன் கர்ரி பிடித்துள்ளார்.

2வது இடத்தை 'Juventus’ French international கால்பந்து கிளப்பை சேர்ந்த வீரர் Paul Pogba பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் இந்திய டெஸ்ட் அணித் தலைவருமான விராட் கோஹ்லி 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் ’நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 23வது இடத்திலும், நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி 27வது இடத்திலும், உசைன் போல்ட் 31வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சா 50வது இடத்தில் உள்ளார்.

உலகளவில் பிரபலமான ஜோகோவிச், மெஸ்ஸி மற்றும் உசைன் போல்ட் ஆகியோரை முந்தி 3 வது இடத்தை விராட் கோஹ்லி பிடித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோகோவிச், மெஸ்ஸியை முந்தி சாதனை படைத்த விராட் கோஹ்லி! Reviewed by Author on May 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.