மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்....
போர்ச்சுக்கல் நாட்டில் 4 மாத கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
இதனால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. ஆனால் அப்பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தையின் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.
எனவே அக்குழந்தை தொடர்ந்து வளர அப்பெண்ணின் கணவர் சம்மதித்தையடுத்து குழந்தை வளர சிகிச்சையளிக்கப்பட்டது.
தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 2.35 கிலோ எடையுடன் நலமுடன் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மூளைச்சாவு அடைந்த நீண்ட நாட்களுக்கு பிறகும் பெண்ணின் வயிற்றில் குழந்தை வளர்ந்து பிறந்தது போர்ச்சுக்கல்லில் இதுவே முதன்முறை.
மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்....
Reviewed by Author
on
June 09, 2016
Rating:

No comments:
Post a Comment