அண்மைய செய்திகள்

recent
-

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்


மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம்என முதன் முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடந்த 2008 ஆம் ஆண்டு, கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இதொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்பு நாடுகளும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா தீவிரவாதிகள் ஹபீஸ் அப்துல் ரஹ்மான்மக்கி, தல்ஹா சயீத், ஹபீஸ்அப்துல் ரவுஃப் ஆகிய மூன்று தீவிரவாதிகளுக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்திருந்தன.

இதற்கு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனா தடுத்து நிறுத்தியிருந்தது.

மூன்று தீவிரவாதிகளுக்கான தடையை நிறுத்தி வைத்ததற்கான சீனாவின் முடிவு நாளையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பற்றியும், நவம்பர் 26 மும்பை தாக்குதல் சம்பவத்தில் அதன் பங்கு பற்றியும், பாகிஸ்தானில் இருந்து இதற்காக அளிக்கப்பட்ட நிதியுதவிகள் பற்றியும் தனது சிசிடிவி9 தொலைக்காட்சியில் சீனா ஆவணப்படமாக சமீபத்தில் ஒளிபரப்பியுள்ளது.

இதுவரை பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா முதன் முறையாக மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கூறியுள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள் Reviewed by Author on June 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.