மன்னார் நகரசபை மண்டபத்தில் இப்தார் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் நகரசபை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 23ம் நோன்பு திறக்கும் நிகழ்வு இப்தார் நிகழ்வானது 29.06.2016ம் திகதி நகரசபை விருந்துபசார மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்டத்தின் சர்வமத ஒன்றிய இணைத்தலைவரும் மன்னார் மூர் வீதி பள்ளிவாயல் பிரதம இமாம் அஸீம் மௌலவி அவர்களும் இந்துமத கோவில் குருக்களும் மன்னார் மாவட்ட குருக்களின் தலைவருமாகிய ஐங்கரசர்மா குருக்கள் அவர்களும் சாந்திபுரம் விகாரையின் பீடாதிபதி விமலரத்னதேரர அவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மன்னார்
மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் நகரசபை செயலாளர் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் வருகை தந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.
தொடர்ந்து நிகழ்வானது கிறாஅத்துடன் ஆரம்பமாகியது. பின்பு நகரசபை செயலாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
சிறப்புரை ஆற்றிய சர்வமத தலைவர்கள் மற்றும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் நோன்பின் மாண்புகளை விளக்கியதோடு இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதன்; மூலம் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க முடியுமென குறிப்பிட்டார்கள். பின்பு அதான் கூறப்பட்டது அதனைத் தொடர்ந்த ஸலவாத்துடன் இப்தார் நிகழ்வு நலன்புரிச்சங்கத்தின் தலைவரின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
மன்னார் நகரசபை மண்டபத்தில் இப்தார் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு
 
        Reviewed by Author
        on 
        
June 30, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
June 30, 2016
 
        Rating: 
















No comments:
Post a Comment