மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.(Photos
யுத்தத்தத்தினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு மீள் குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இந்து கலாச்சார அமைச்சினால் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் இன்று சனிக்கிழமை மாலை வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் பிரதேச்ச செயலாளர் பிரிவில் 261 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் பெரியகடை கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கு வீடு அமைக்கும் வகையில் இன்று சனிக்கிழமை மாலை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக அடிக்கல்லினை நாட்டி வைத்து வீட்டு கட்டுமானப்பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.(Photos
Reviewed by NEWMANNAR
on
June 25, 2016
Rating:

No comments:
Post a Comment