பலூனில் பறந்து 11 நாட்களில் உலகை சுற்றி ரஷ்யா வீரர் உலக சாதனை!
ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய ராட்சத பலூனில் பறந்து 11 நாட்களில் உலகை சுற்றி வந்ததன் மூலம் ரஷியாவை சேர்ந்த பெடர் கோன்யுகோவ் என்பவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
துணிச்சலான சாகசங்களை செய்யும் ரஷிய நாட்டைச் சேர்ந்த பெடர் கோன்யுகோவ் என்பவர், பலூனில் தனியாக உலகை சுற்றும் பயணத்தை கடந்த 12ம் திகதி அவுஸ்திரேலியாவில் உள்ள நார்த்தம் நகரில் இருந்து தொடங்கினார்.
184 அடி உயரத்தில் பறக்கும் இந்த ஹீலியம் பலூன், அண்டார்டிகா பெருங்கடல் பகுதியை இரவு நேரங்களில் கடக்கும் போது, (-50C) மிகக் குறைவாக இருக்கும் வெப்பநிலையின்போது கவனமாக இல்வாவிட்டல் மரணத்தை விளைவிக்கும் ஆபத்து நேரிடக்கூடும்.
ஒரு மனிதனுக்கு மரணத்தை எளிதாக விளைவிக்கும் அளவுக்கு உறையவைக்கும் குளிருக்கும் இடையில், மனஉறுதியுடன் தனது பயணத்தை தொடர்ந்த பெடர் பயணத்தின் 11-வது நாளான இன்று அவுஸ்திரேலியாவின் நார்த்தாம் நகரின்மீது பறந்து தனது 34 ஆயிரம் கிலோமீட்டர் தூர உலக பயணத்தை நிறைவு செய்தார்.
நார்த்தாம் நகர வான்எல்லைக்குள் நுழைந்த அவரது பலூன் சுமார் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெடர் கோன்யுகோவ், 11 நாள் பயணத்திற்கு பிறகு மேற்கு அவுஸ்திரேலியாவின் Wheatbelt பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கினார்.
முன்னதாக, அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் பாசெட் என்பவர், தனி ஒருவராக 13 நாட்கள் 8 மணி நேரங்களில் உலகைச் சுற்றி வந்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பலூனில் பறந்து 11 நாட்களில் உலகை சுற்றி ரஷ்யா வீரர் உலக சாதனை!
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment