அண்மைய செய்திகள்

recent
-

சுவாதி கொலை வழக்கு ஆகஸ்ட் 3ம் திகதி விசாரணை!


மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கு, ஆகஸ்ட் 3ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த, மென்பொறியாளர் சுவாதி (24),கடந்த ஜூன், 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக, நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், (24), என்பவரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

ராம்குமாரை வீடியோ எடுக்கவும், கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்கவும் அனுமதி கேட்டு, எழும்பூர் பெருநகர, 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், போலீசார் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

முதல் மனு விசாரணைக்கு வந்த போது, மாஜிஸ்திரேட் கோபிநாத், ஆகஸ்ட், 8ல், ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இரண்டாவது மனு, நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் கொளஞ்சி நாதன் ஆஜராகி,

ராம்குமார் அறையில், முக்கிய தடயம் சிக்கியது. அதை உறுதிப்படுத்த, ராம்குமார் கைப்பட எழுதிக் கொடுத்த ஆவணத்துடன், அவரது கையெழுத்தை பெற்று, ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு, ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து, மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த, மாஜிஸ்திரேட் கோபிநாத், வழக்கு விசாரணையை ஆகஸ்ட், 3ம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

சுவாதி கொலை வழக்கு ஆகஸ்ட் 3ம் திகதி விசாரணை! Reviewed by Author on July 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.