நீதித்துறையின் சுயாதீன தன்மை குறித்த பேசியுள்ள மனித உரிமைகள் ஆணையாளர்!
மீன்பிடி, உல்லாசத்துறை, என நாட்டின் பொருளாதாரத்திக்கு மூதூர் பிரதேசம் பாரிய பங்களிப்புச் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பகுதியின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மூதூர் மாவட்ட நீதிமன்றத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நல்ல மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் இந்நாட்டில் சட்டத்துறை சிறப்பாக செயற்பட வேண்டும். எனவே, நேர்மையான முறையில் நீதிச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
நீதித்துறையில் தேங்கிக் கொண்டிருக்கும் வழக்குகளை தீர்த்துத் தருவதற்கான வழிமுறைகளை தனக்கு பெற்றுத்தர வேண்டும்.
பொதுமக்களின் நலன்கருதி இத்துறையை மேம்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் உச்ச கட்ட நிதியியை செலவிட அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களையும், கடமைகளையும் மனசாட்சிக்கு விரோதமில்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினால் அடிக்கடி பேசப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நாம் அறிந்திருக்கின்றோம்.
நாட்டின் மனித விழுமியங்களை பாதுகாப்பதற்காக அரசு அதன் முனைப்பான செயற்பாடுகளை காட்டியும், செயற்படுத்தியும் வருகின்றது.
நீதிதுறையின் சுயாதீன தன்மை குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடன் பேசியிருந்தார். மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, அதிகாரத்தை பயன்படுத்தவோ இல்லை.
இந்நாட்டு மக்களின் நலனுக்காகவும, சட்டத்துறையினை மேம்படுத்துவதற்குமாகவே ஆணையாளர் சட்டத்துறையின் சுயாதீனம் பற்றி பேசியுள்ளார்.
அரசியலமைப்பும், சட்டத்துறையும் சர்வதேச ரீதியாக எமக்கு வரவேற்பை பெற்றுத்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
நீதித்துறையில் அமர்ந்துள்ளவர்கள் அவரவர் பணியினை திறன்பட செய்யாதுவிடின் நீதித்துறையில் பல விபரீதங்களும், மக்களுக்கான நீதியும் சரியாக கிடைக்காது போய்விடும்.
நீதித்துறையை திறன்பட நடைமுறைப்படுத்த இந்நாட்டின் தலைவர் என்றவகையில் தன்னால் உச்ச பங்களிப்பை நல்க முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்நிகழ்வில் அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீதித்துறையின் சுயாதீன தன்மை குறித்த பேசியுள்ள மனித உரிமைகள் ஆணையாளர்!
Reviewed by Author
on
July 30, 2016
Rating:

No comments:
Post a Comment