அண்மைய செய்திகள்

  
-

82 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் 42 வயது மிஷ்பா படைத்த சாதனை....


லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்,  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், ஜோடி சேர்ந்த மிஷ்பா உல் ஹக்கும் ஆஷாத் சபீக்கும் நிதானமாக விளையாடி, ரன்களை உயர்த்தினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்தது.

மிஷ்பா உல் ஹக் 110 ரன்களை அடித்தார். 154 பந்துகளை எதிர்கொண்ட அவர், 17 பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் சதம் அடித்த கேப்டன் என்ற வரலாற்று சாதனையையும் மிஷ்பா படைத்தார்.

இதற்கு முன், கடந்த 1934 ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் பெஸ்டி ஹென்ட்ரன் தனது 45 வது வயதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக  சதமடித்திருந்தார். அதற்கு பிறகு தற்போது மிஷ்பா உல் ஹக்,  42 வயதில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். மிஷ்பா சதமடித்த பின்னர்,  தனது பாணியில் மைதானத்தில் விழுந்து வணங்கினார்.

பின்னர் லார்ட்ஸ் மைதானத்தில் 10 புஸ்அப் எடுத்தார் மிஷ்பா.  இந்த வயதிலும் மிஷ்பா சிறப்பாக விளையாடுவதற்கு சில ராணுவ அதிகாரிகள் கொடுத்த பயிற்சிதான் காரணமமாம். அவர்கள்தான் மிஷ்பாவுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தனராம்.  இங்கிலாந்து மண்ணில் சதமடித்தால் இதனை செய்வதாக அவர்களிடம் உறுதி அளித்திருந்தாராம். அதனை நிறைவேற்றுவதற்காக புஸ்அப் எடுத்ததாக மிஷ்பா தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஷ்பா உல் ஹக்கின் 10 வது சதம் இது. இங்கிலாந்து மண்ணில் மிஷ்பா அடித்த முதல் சதமும் இதுதான். அதுவே சாதனை சதமாகவும் அமைந்து விட்டது.


82 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் 42 வயது மிஷ்பா படைத்த சாதனை.... Reviewed by Author on July 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.