அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்! இலங்கைப் பெண்ணின் திகில் அனுபவம்


பிரான்ஸ் நீஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை பெண்ணொருவர் தனது திகில் அனுபவத்தை வெளியிட்டுள்ளார்.

நீஸ் நகரில் வசிக்கும் இலங்கை பெண்ணான சஜீவனி பிரியந்தி கதனாராச்சி என்பவர் ஊடகம் ஒன்றுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து தனது அனுபவத்தை தெரிவிக்கையில்,

“சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தான் பணிபுரிவதாகவும், பணியை நிறைவு செய்த பின்னர் நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானும் என் பிள்ளையும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தால் எங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட வாய்ப்புகள் இருந்தன.

சுகயீனமாக இருந்தமையினால் நான் அங்கு செல்லவில்லை. எனினும் நேற்று காலை நான் பணிபுரியும் ஹோட்டலுக்கு சென்று பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியடைதேன்.

உயிரிழந்த சிறு பிள்ளைகளின் சடலங்களை எடுத்து செல்லும் காட்சிகள் கொடுமையாக இருந்தன. என்னுடன் பணி புரியும் பெண்ணொருவர் இதுவரையிலும் உறங்கவில்லை. சம்பவம் தொடர்பிலான அதிர்ச்சியிலேயே அவர் உள்ளார்.

இந்த சம்பவத்தில் அதிகமாக சிறு பிள்ளைகளே உயிரிழந்துள்ளன. அந்த சிறுபிள்ளைகளின் சடலங்களை பெற்றோர் தூக்கி செல்லும் காட்சிகளும் அதிர்ச்சியாகவே உள்ளன.

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாமையினால் சம்பவத்தை நேரடியாக பார்க்கவில்லை. சம்பவத்தின் இடையில் வீட்டின் மாடியில் இருந்து பார்த்தேன்.

நேற்று காலை விடியும் வரை அம்பியூலன்ஸ் வண்டிகள் தொடர்ந்து சென்றுக் கொண்டே இருந்தன.

பொதுவாக மிகவும் மகிழ்ச்சியாக வாழும் நீஸ் நகர மக்கள் தாக்குதலின் பின்னர் மிகவும் அதிர்ச்சியடையந்து வீட்டினுள்ளே தங்கியுள்ளனர்.

அந்த மக்கள் நேற்று முன்தினம் முழுவும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். எவ்வளவு அனுபவித்து வாழ்ந்தார்கள் என்று எனக்கு கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. எனினும் நேற்று இடம்பெற்ற சம்பவம்....... என அவர் மிகவும் அதிர்ச்சியுடன் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நீஸ் நகரத்தில் கிட்டத்தட்ட 75 இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அழைப்பிதழ்கள் உணவகத்தில் உள்ளன.

எப்படியிருப்பினும் நான் அறிந்த வகையில் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

மிகவும் பரபரப்பாக மக்கள் கூட்டமாக வாழும் நீஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், மக்கள் மிகவும் அதிர்ச்சியுடனும் பயத்துடன் வாழ்ந்து வருவதாக நீஸ் நகரில் வசிக்கும் இலங்கை பெண்ணான சஜீவனி பிரியந்தி கதனாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்! இலங்கைப் பெண்ணின் திகில் அனுபவம் Reviewed by NEWMANNAR on July 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.