அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்:

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக் இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை வவுனியாவிலும்,ஓமந்தையிலும்,மதியம் கிளிநொச்சி இரனைமடு படை முகாமிலும், பரவிபாஞ்சான் பிரதேசத்திலும் மாலை வலி வடக்கிலும் குறித்த போராட்டம் நடத்தபட்டுள்ளது.

காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணியை உடனடியாக விடுதலை செய் எனும் கோரிக்கையுடன் வாய்களை கறுப்பு நிறதுணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக கிளிநொச்சி இராணுவப் படைமுகாம் தலைமையகம் நோக்கி வந்த இளைஞர் யுவதிகள் இரனைமடு கனகாம்பிகை கோவில் முன்பாக நின்றுபோராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பரவிப்பன்சான் காணிகளை விடுவிக்கக் கோரி கந்தசாமி கோவில் அருகில் உள்ள இராணுவ முகாம் முன்றலிலும் வீதியில் இறங்கி வாகனகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

எமது வாழ்வாதாரத்தின் ஆதரமாக இருந்த நிலங்களில் இன்று இராணுவத்தினா் விவசாய பண்ணைகளையும, விலங்கு பண்ணைகளையும், வியாபார நிலையங்கைளையும் உல்லாச விடுதிகளையும் சிற்றுண்டிச்சாலைகளையும் என பல்வேறு வியாபார நோக்கங்களோடு நடத்தி வருகின்றனா் எமது மக்கள் சொந்த காணிகள் இருந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்றவா்களாக வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனா். எனவே எமது நிலம் எமக்கே வேண்டும் கோரிக்கை விடுத்துள்ள ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞா்கள்

இராணுவ ஆட்சி வேண்டாம், வடக்கில் இராணுவ ஆட்சி தெற்கில் ஜனநாயகம். அதிகாமுடையது அரசாங்கமா இராணுவமா? பாடசாலைகள் முன் படை முகாம் எதற்கு? இராணுவமே நீங்கள் வியாபாரிகளா? பாதுகாப்பு படையினரா? வாக்குறுதிகளால் நீதி கிடைக்காது போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்திருந்னா்.

மக்கள் போராட்டம்



கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்: Reviewed by NEWMANNAR on July 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.